Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அவதார் முன்பதிவு மட்டும் இத்தனை கோடி வியாபாரமா?

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (08:57 IST)
அவதார் 2 திரைப்படம் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. இன்று வரை உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையும் அவதார் வசம் உள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

அவதார் தி வே ஆப் வாட்டர் என்ற இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் டிசம்பர் 16ல் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே தொடங்கியது.

இந்தியாவிலும் இந்த படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் ரிலீஸூக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் இப்போது வரை இந்தியாவில் முன்பதிவில் மட்டுமே 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments