Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2019 ல் கேப் விடாமல் நடிக்கப்போறேன் - சிவகார்த்திகேயன்!

Advertiesment
2019 ல் கேப் விடாமல் நடிக்கப்போறேன் - சிவகார்த்திகேயன்!
, வெள்ளி, 4 ஜனவரி 2019 (12:25 IST)
இந்த வருடம் முழுவதும்  நிறைய படங்களில் நடிக்கப்போறதாக முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


 
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து தற்போது முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக வளர்ந்து வருகிறார். 
 
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது  டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், 2018ல் நடிகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக வலம் வந்த என்னுடைய எல்லா முயற்சிக்கும் உங்களின் வரவேற்பு நன்றாகவே இருந்தது. இது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 
 
மேலும் இந்த பாசிட்டிவ் எண்ணங்கள் எனக்கு நல்ல நல்ல முயற்சிகளை செய்யத் தூண்டுகிறது. வாயாடி பெத்த புள்ள’ பாடலுக்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த வரவேற்பும், பாராட்டும், ஆசீர்வாதமும் என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. 
 
மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி நம்பிக்கையை மட்டும் மூலதனமாக கொண்டு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய கனா படத்தைக் கொண்டாடி விட்டீர்கள். அனைவருக்கும் நன்றி. 
 
கனா படத்தின் அபார வெற்றி எனக்கு இன்னும் பல நல்ல வி‌ஷயங்களைச் செய்யவேண்டுமென உற்சாகம் அளிக்கிறது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் நிறைய படங்களில் நடிக்கிறேன். ’ என சிவகார்த்திகேயன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ் ஹீரோக்கள் வீட்டில் ஐடி ரெய்டு..!