Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடலாசிரியர்களை மட்டம் தட்டிய இளையராஜா

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (09:44 IST)
இளையராஜா தனது இசையால்தான் பாடல் வரிகள் சிறப்பான இடத்தைப் பெற்றன என்ற கருத்தை சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கூறியுள்ளார்.

இளையராஜாவின் 75-ம் ஆண்டு பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமான விழா ஒன்று சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி. ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் இளையராஜா

அப்போது மாணவிகள் வேண்டுகோளுக்கு இணங்க தான் இசையமைத்த சிலப் பாடல்களைப் பாடி, பாடல்கள் உருவான விதம் மற்றும் பாடல்கள் பற்றிய சுவாரசியத் தகவல்களைக் கூறினார்.

அப்போது தளபதி படத்தில் ’சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ எனும் பாடலைப் பாடி முடித்ததும், அப்பாடல் பற்றிப் பேசினார். ’இந்த பாடலில் வரிகள் யாவும் மிகவும் சாதாரணமானவை. எந்த கவியரங்கத்தில் வாசித்தாலும் இவை சிறப்பானக் கருத்தையோ உணர்வையோ தூண்டாது.ஆனால் பாடலாசிரியர் வாலி அவர்கள் அவற்றை சிறப்பான இசையின் மீது வைத்ததால்தான் அவை காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளன.’ எனக் கூறினார்.
இதே போல கண்ணதாசன் பாடல் ஒன்றையும் குறிப்பிட்டு எம் எஸ் வி யின் இசையால்தான் இந்த பாடல் சிறந்து விளங்குகிறது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலர்ஃபுல் ட்ரஸ்ஸில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் அசரடிக்கும் போட்டோஷூட் ஆல்பம்!

நரகத்துல இருக்குறவனுக்கு சொர்க்கத்தோட சாவி கெடச்சா..?.. எதிர்பார்ப்பைக் கூட்டும் சொர்க்கவாசல் டிரைலர்!

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு.. பின்னணி என்ன?

சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவு… சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ரி ரிலீஸ்… !

அடுத்த கட்டுரையில்
Show comments