இளையராஜா உள்பட 4 பேருக்கு சமீபத்தில் ராஜ்யசபா எம்பி பதவி அறிவிக்கப் பட்டது என்பதும் இளையராஜா தவிர மற்ற மூவரும் எம்பி பதவியை ஏற்றுக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்று இருந்த இளையராஜா சமீபத்தில் இந்தியா திரும்பிய நிலையில் நாளை அவர் பாராளுமன்றத்தில் என்பதை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதனையடுத்து இன்று அவர் டெல்லி சென்றடைந்தார். டெல்லி வந்த இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் மேளதாளங்களுடன் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது கூறப்படுகிறது
இதனையடுத்து இளையராஜா நாளை எம்பியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.