Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”காத்திருங்கள்… இன்று மாலை அறிவிப்பு”… இளையராஜாவின் வைரல் டிவீட்!

Webdunia
புதன், 18 மே 2022 (09:29 IST)
இசைஞானி இளையராஜா தற்போது பகிர்ந்துள்ள டிவீட் ஒன்று இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. கிட்டத்தட்ட 1400 படங்களுக்கு மேல் 6000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இப்போதும் விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

படங்களில் பிஸியாக இருந்தாலும், இளையராஜா தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல கச்சேரிகளை வரிசையாக நடத்தி வருகிறார். அந்த வகையில் வரும் ஜூன் 2 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் இளையராஜாவின் கச்சேரி நடக்க உள்ளது. இந்நிலையில் தற்போது இளையராஜா தன்னுடைய அடுத்த கச்சேரி குறித்த அறிவிப்பை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

அதில் “காத்திருங்கள். ஜூன் 5 ஆம் தேதி நடக்கும் தனித்துவமான ஒரு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு மே 18 மாலை 6 மணிக்கு வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து இளையராஜாவின் கச்சேரி நடப்பது அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments