Publish Date: Wed, 18 May 2022 (09:20 IST)
Updated Date: Wed, 18 May 2022 (10:58 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்த பாதிப்புகள் மீண்டும் குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,829 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,31,27,199 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,24,293 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,87,259 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 15,647 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.