Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீ இருந்திருந்தால்....சுஷாந்த் சிங் காதலி வெளியிட்ட வீடியோ

Advertiesment
suhanth -rea
, புதன், 14 ஜூன் 2023 (17:50 IST)
பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். இவர் கடந்த  2020 ஆம் ஆண்டு வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம்மான முறையில் மரணமடைந்தார்.

இவரது மரணத்தில் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அதன்பின்னர்,  இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.  இவழக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுஷாந்த் மறைந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ள  நிலையில், அவரது முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி தன்  சமூக வலைதளத்தில் சுஷாந்த் சிங்குடன் இருக்கும் ஒரு பழைய வீடியோவை பதிவிட்டுள்ளார்.

பாறை  ஒன்றின் மேல் இருவரும் இருக்கும் வீடியோவில்,  நீ இங்கு இருந்திருந்தால் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகுமார் பிடியில் சூர்யா... ஜோதிகாவுக்கு தூது வேலை பார்த்தது இந்த பிரபல நடிகர் தான்!