Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படுக்கையை பகிர்வது ஆண்களது குற்றம் மட்டுமல்ல: ஆண்ட்ரியா அதிரடி கருத்து

Advertiesment
விஸ்வரூபம் 2 | வட சென்னை | மீ டூ | ஆண்ட்ரியா | vada Chennai | me too india | andrea jeremiah
, புதன், 17 அக்டோபர் 2018 (07:04 IST)
தனுஷுடன் ஆண்ட்ரியா நடித்த 'வடசென்னை' திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில் 'மீடூ' விவகாரம் குறித்து ஆண்ட்ரியா சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

மீடூ விவகாரம் குறித்து ஆண்ட்ரியா கூறியதாவது: எனக்கு இது போன்ற ஒரு அனுபவம் இல்லை. நான் ஒருவருடன் டேட்டிங் செல்கிறேன் என்றால், எனக்கு அவனை பிடித்திருந்தது என்று அர்த்தம். அதே போன்று தான் அவனுக்கும் என்னை பிடித்திருக்கும்.

ஒருவருடைய படுக்கையில் யார் இருக்கின்றார்கள், யார் இல்லை என்பதெல்லாம், இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விஷய்ம். படுக்கையை பகிர்வது ஆண்களது குற்றம் மட்டுமல்ல. ஆனால், இதில் நாம் மற்றவர்களை குற்றம் சாட்டுகிறோம். தங்களது வேலைக்காக பெண்கள் படுக்கையை பகிரவிரும்பவில்லை என்றால், யாரும் அவர்களை கேட்கமாட்டார்கள்.

webdunia
பெண்கள் முதலில் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படியிருந்தால், யாரும் அவர்களை நெருங்க முடியாது. தங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால், ஆண்கள் மட்டுமல்ல எல்லோரும் கிட்ட நெருங்கத்தான் செய்வார்கள். இவ்வாறு ஆண்ட்ரியா தெரிவித்தூள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொழிலில் போட்டி இருக்கட்டும், நிஜத்தில் வேண்டாம்: தனுஷுக்கு சிம்பு வாழ்த்து