Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன்” - விக்ரம்

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (15:17 IST)
‘நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன்’ என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’, ஹரி இயக்கத்தில் ‘சாமி ஸ்கொயர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். அதன்பிறகு ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார்.
 
விக்ரம் மகன் துருவ் விக்ரமும் ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘வர்மா’ என தலைப்பு வைத்துள்ளனர். பாலா  இயக்குகிறார்.
 
“என் மகன் நடிக்கும் படத்தை, ஒரு தந்தையாகப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். ‘அர்ஜுன் ரெட்டி’ என் மகனுக்குப் பொருத்தமான கதை. இந்தப் படத்தில் அவன் நடிக்காவிட்டால் நானே நடித்திருப்பேன். நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் விக்ரம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

என்னுடன் பணியாற்றிய பின்னர் அஜித்தின் ஸ்டைல் மாறியுள்ளதா?.. ஸ்டண்ட் மாஸ்டர் பெருமிதம்!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

அடுத்த கட்டுரையில்
Show comments