Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த நடிகைக்கு வெட்கம்னா என்னன்னே தெரியாதாம்

இந்த நடிகைக்கு வெட்கம்னா என்னன்னே தெரியாதாம்
, வியாழன், 13 ஏப்ரல் 2017 (19:19 IST)
எனக்கு வெட்கம் என்றாலே என்னவென்று தெரியாது, எனகு வெட்கப்படவும் வராது என இறுதிச் சுற்று நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.


 

 
இறுதிச் சுற்று படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். முதல் படத்திலே குத்துச் சண்டை வீராங்கனையாக வந்து அனைவரையும் கவர்ந்து விடார். 
 
தமிழில் இறுதிச் சுற்று படத்திற்கு அடுத்து ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார். இதையடுத்து தற்போது சிவலிங்கா படத்தில் ராகவா லாரன்ஸுடன் நடித்துள்ளார். இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து பேசிய ரித்திகா சிங் கூறியதாவது:-
 
சிவலிங்கா படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக என்னால் முடிந்த வரை சிறப்பாக நடித்துள்ளேன். பாடல் காட்சிகளில் கவர்ச்சி தேவைப்பட்டது. அதனால் அதற்கேற்ற உடை அணிந்து ஆடினேன்.
 
எனக்கு டான்ஸ் ஆட தெரியாது. அதில் புடவை வேறு அணிந்து டான்ஸ் ஆடியது மிகவும் கஷ்டமாக இருந்தது. எனக்கு வெட்கம் என்றால் என்னவென்றே தெரியாது, வெட்கப்படவும் வராது. எனக்கு திருமணம் நடக்கும்போது கூட நான் மேடையில் வெட்கப்பட மாட்டேன், என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போக்கிரி சைமன்: மலையாளத்தில் விஜய் ரசிகர்கள் பற்றிய கதை!!