Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரபரப்புக்கு பின் சீனாவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம்!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (09:35 IST)
கொரோனா வைரஸ் காரணமாக மிகப்பெரிய பாதிப்பை அடைந்த சீனாவின் வூகான் மாகாணம் தற்போது இயல்பு நிலைக்கு கிட்டத்தட்ட திரும்பிவிட்டது. பள்ளி, கல்லூரிகள், மால்கள், கடைகள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் திரையரங்குகளும் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ஏற்கனவே திரையிட தயாராக உள்ள பல சீன திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் ஒரு இந்திய திரைப்படமும் சீனாவில் வெளியாக உள்ளது. ஹிருத்திக் ரோஷன் அடுத்த ’சூப்பர் 30’ என்ற இந்தி திரைப்படம்தான் தற்போது சீனாவில் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் சீனாவில் சென்சார் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது
 
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவரின் உண்மை கதை தான் இந்த சூப்பர் 30 திரைப்படம் என்றும் இந்தத் திரைப்படத்தில் ரித்திக் ரோஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் மேலும் இந்த படத்தில் மிருணாள் தாகூர், ஆதித்யா ஶ்ரீவஸ்தவா, நதிஷ் சாந்து, பங்கஜ் திரிபாதி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கங்கனா ரனாவத் நடித்த ‘குயீன்’ படத்தை இயக்கிய விஷால் பால் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments