Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி மன்றத்தில் உறுப்பினராவது எப்படி?; வெளியான தகவல்

Advertiesment
ரஜினி மன்றத்தில் உறுப்பினராவது எப்படி?; வெளியான தகவல்
, செவ்வாய், 2 ஜனவரி 2018 (12:55 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசிலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினி மன்றத்தில் உறுப்பினராவது எப்படி என்பது குறித்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்கள் மத்தியில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்றும் கூறினார். இந்த அறிவிப்பு ரஜினி  ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் கட்சி அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாளே ரஜினி மன்றம் என்ற பெயரில் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இணையதளப் பக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். உறுப்பினராவதற்கான வழிமுறையும் நேற்று  அறிக்கை வாயிலாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
 
அதில், “பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்களும், பதிவு செய்யப்படாத மன்றத்தின் உறுப்பினர்களும் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றம் கொண்டுவரும்பொருட்டு rajinimandram.org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், உங்கள் பெயர் மற்றும் வாக்காளர் அடையாள எண்ணை பதிவு செய்து, உறுப்பினர் ஆகுங்கள்.  தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவோம். வாழ்க தமிழக மக்கள். வளர்க தமிழ்நாடு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரஜினி ரசிகர் மன்றம் என்ற பெயரில் புதிதாக ட்விட்டர் பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியை விழுங்க காத்திருக்கும் ஒரு மரணக்குழி..