ஆங்கில படங்களுக்கு சவால் விடும் சண்டை காட்சிகளால் அரங்கமெல்லாம் விசில் சத்தத்தால் அரங்கமே அதிர்வதாக சென்னையிலுள்ள சக்தி சினிமா தியேட்டர் தெரிவித்துள்ளது.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நேற்று வெளியான படம் வலிமை. இப்படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளதால், வசூல் முதல் நாளில் 36கோடி ரூபாயைத் தாண்டியுள்ளாதால் படக்குழுவினரும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இப்படத்திற்கு கலவையாக விமர்சனங்கள் வருகின்ற போது, இப்படத்தின் 14 நிமிடக்காட்சிகளை குறைக்கவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இ ந் நிலையில், சென்னையில் மிக முக்கிய சினிமா தியேட்டரான சக்தி சினிமாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கில படங்களுக்கு சவால் விடும் சண்டை காட்சிகளால் அரங்கமெல்லாம் விசில் சத்தம்!
காட்சிக்கு காட்சி எழும் கைதட்டல் ஒலியில் விமர்சணங்கள் நிசப்தம் ஆகிவிட்டது!
வலிமை எப்போதும் வெல்லும்.. இப்பொழுதும் எனப் பதிவிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.