Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் அதிக வசூல்.... புதிய சாதனை படைத்த 'ஜெயிலர்'

Advertiesment
தமிழகத்தில் அதிக வசூல்.... புதிய சாதனை படைத்த  'ஜெயிலர்'
, வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (17:25 IST)
தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில்  ரஜினியின் 'ஜெயிலர்' படம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில்  கடந்த  மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ படம் உலகம் முழுவதும் விமர்சன அளவில் வசூல்  ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று, உலகளவில் 525 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல்செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் ரூ.226.30 கோடியை கடந்துள்ளது ஜெயிலர் படம். தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் பட சாதனையை ( ரூ.225 கோடி) ரஜினியின் ஜெயிலர் படம் முறியடித்துள்ளது.  இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜெயிலர் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதால், சன்பிக்சர்ஸ் அதிபர் கலாநிதிமாறன், நடிகர் ரஜினிகாந்திற்கு சர்ப்பிரைஸாக BMW X7 என்ற சொகுசு காரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைதான ஐஆர்எஸ் அதிகாரியுடன் டேட்டிங் செய்த நடிகை..