Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி…. கதாநாயகி கிடைக்கவில்லையாம்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (10:55 IST)
விஷால் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களின் மூலம் பி கிரேட் இயக்குனர் என்ற இமேஜைக் கொண்டிருந்தார். அதன் பின்னர் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார். அதன் பின்னர் இப்போது காதலை தேடி நித்யானந்தா மற்றும் பகீரா ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்த பின்னர் தனது எண்ண ஓட்டமே மாறிவிட்டதாகக் கூறியுள்ளார். அதன் பிறகு எனது கதை தேர்வு வேறு ஒரு தளத்தில் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் தனது 18+ பாதையை மாற்றிக்கொண்டு கமர்ஷியலாக படங்கள் இயக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளார். அதையடுத்து இப்போது விஷாலோடு ஒரு ஆக்‌ஷன் படத்தை இயக்குவதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் பிரம்மாண்டமாக சுமார் 70கோடி ரூபாயில் உருவாக உள்ளதாம். இதுவரை விஷால் படங்களுக்கு இல்லாத பட்ஜெட் இந்த படத்துக்கு போடப்பட உள்ளதாம். இந்த படத்துக்காக இப்போது கதாநாயகி தேடும் படலம் நடந்து வருகிறதாம். ஆனால் ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படங்களில் கதாநாயகிகளை மோசமாக சித்தரித்துள்ளதால் பல முன்னணி நடிகைகள் நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments