Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் விஜய் படத்தில் பூஜா ஹெக்டே! தளபதி 66 அப்டேட்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (10:48 IST)
நடிகர் விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்திலும் பூஜா ஹெக்டேவே கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ள வம்சி  வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அல்லது பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்பட்டது. ஆனால் அதில் இப்போது பூஜா ஹெக்டேவுக்கே வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments