Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஹீரோ’ கதைத்திருட்டு விவகாரம்: பி.எஸ்.மித்ரன் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (22:14 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ விவகாரம் குறித்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள்‌ சங்கத்திற்கு அளித்த விளக்கம் பின்வருமாறு:
   
தங்களின்‌ அழைப்பின்‌ பெயரில்‌ நேற்று (21.11.2019) மாலை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள்‌ சங்க அலுவலகத்திற்கு வந்திருந்தேன்‌. என்னுடைய, ஹீரோ கதை சம்பந்தமாக, சங்க நிர்வாகிகள்‌ மற்றும்‌ உறுப்பினர்கள்‌ சுமார்‌ 25 நபர்கள்‌ முன்னிலையில்‌ நான்‌ என்னுடைய கதையையும்‌ அது சம்பந்தமாக தன்னிலை விளக்கத்தையும்‌ அளித்தேன்‌. எனக்கு முன்னாலேயே, புகார்‌ அளித்த நபர்‌, அவருடைய கதையை பதிவு செய்திருப்பதினால்‌ நான்‌ அந்த நபருக்கு தக்க நஷ்ட ஈடு வழங்க வேண்டூம்‌ என்று தாங்கள்‌ வலியுறுத்தினீர்கள்‌. அதற்கு, நான்‌ என்‌ சார்பான கீழ்கண்ட வாதங்களை முன்வைத்தேன்‌. அவை: 
 
1. நான்‌ பத்திரிக்கை செய்தியில்‌ இருந்துதான்‌ என்‌ கதையின்‌ கருவை எடூத்து இந்த கதையை உருவாக்கியிருக்கிறேன்‌. மேலும்‌ கதை உருவான சிறுசிறு வளர்ச்சிக்கட்டங்களுக்குமான பதிவுகளையும்‌ ஆவணங்கள்‌, ஆடியோ பைல்‌ வைத்திருக்கிறேன்‌.
 
2. நான்‌ என்‌ கதையையும்‌ சங்கத்தில்‌ பதிவு செய்து வைத்திருக்கிறேன்‌.
 
3. ஒத்த சிந்தனையை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்‌. கதையை பதிவு செய்து வைப்பது திருடுபோய்விடாமல்‌ இருக்க பாதுகாப்புக்குதானே ஒழிய இதுபோல யாருமே சிந்தித்துவிடக்கூடாது. என்பதற்கல்ல. புகார்‌ அளித்தவருக்கும்‌ என்‌ படம்சார்ந்த குழுவினர்‌ யாருக்கும்‌ கதை சம்மந்தமாக எந்த வித தொடர்பும்‌ முகாந்‌திரமும்‌ இல்லாத சூழ்நிலையில்‌ என்‌ சொந்த சிந்தனையை அங்கீகரிக்க மறுப்பது இனி வரும்‌ காலங்களில்‌ எப்படி கதை திரைக்கதை எழுதுவது என்று அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவர்‌ எனக்கு முன்பே அவர்‌ கதையை பதிவு செய்து வைத்திருப்பதினால்‌ மட்டுமே நான்‌ அவர்‌ கதையிலிருந்துதான்‌ உந்தப்பட்டிருப்பேன்‌ என்று
முடிவிற்கு வந்துவிட்டீர்களா? அப்படி இல்லையென்றால்‌, நான்‌ பலமுறை தங்களிடம்‌ வலியுறுத்தி கேட்டுக்கொண்ட பிறகும்‌, ஏன்‌ தாங்கள்‌ பதிவு. செய்யப்பட்ட எங்கள்‌ இருவரின்‌ கதையையும்‌ ஒப்பிட்டு பார்க்க
மறுக்கிறீர்கள்‌?
 
மேலும்‌, நான்‌ என்னுடைய திரைக்கதையை செம்மைப்படுத்த மூன்று திரை எழுத்தாளர்களை (திருவாளர்கள்‌ பொன்‌.பார்த்திபன்‌. சவரிமுத்து, அந்தோனி பாக்கியராஜ்‌) இந்த படத்தில்‌ நியமித்து, அவர்களுடைய பங்களிப்பின்‌ முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களுக்கு நல்ல சம்பளத்தையும்‌ பல்லு தந்திருக்கிறேன்‌. அவர்களுக்கும்‌ இந்த திரைக்கதையில்‌ பெரும்‌ பங்கு இருக்கிறது. ஆகவே, எழுத்தையும்‌ எழுத்தாளர்களையும்‌ என்றுமே நான்‌ மதிப்பவன்‌ என்றபோதிலும்‌, என்‌ கதைக்கு சிறிதும்‌ சம்மந்தபடாத ஒருவருக்கு நான்‌ ஏன்‌ நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்‌? ஒன்னறை ஆண்டுகளாக உழைத்த எங்கள்‌ குழுவின்‌ உழைப்பை உதாசீனப்படுத்துவதுதான்‌ சங்கத்தின்‌ நிலைப்பாடா?
 
முடிவாக, பதிவு செய்யப்பட்ட என்‌ கதையையும்‌, புகார்‌ கொடுத்த நபரின்‌ பதிவு செய்யப்பட்ட கதையையும்‌ எங்கள்‌ இருவர்‌ முன்னிலையில்‌ ஒப்பிட்டு பார்த்து, இருவருடைய கதையும்‌ ஒன்றாகவே இருக்கிறதா என்று ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வாருங்கள்‌.
 
மேற்கண்டவாறு நான்‌ தெரிவித்தேன்‌.
 
இருப்பினும்‌, தாங்களும்‌ மற்றவர்களும்‌ எந்த ஒரு முடிவிற்கும்‌ வராததால்‌, மீண்டும்‌ ஒரு முறை, பதிவு செய்யப்பட்ட இரண்டு கதைகளையும்‌ முறையாக ஒப்பிட்ட பார்க்கும்படி தங்களை வேண்டியும்‌ அதனை வலியுறுத்தியும்‌ கூறி விடைப்பெற்றேன்‌.
 
மேலும்‌, இக்கடிதத்தின்‌ மூலமாக நான்‌ தங்களை மீண்டும்‌ பணிவன்புடன்‌ கேட்டுக்கொள்வதெல்லாம்‌, தயவுசெய்து. பதிவு, செய்யப்பட்ட இரு முழுதிரைக்கதைகளையும்‌ முறையாக ஒப்பிட்டுப்‌ பார்த்து, தக்க முடிவை
எடுக்கவும்‌. 
 
இவ்வாறு பி.எஸ்.மித்ரன் தனது விளக்க கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

தியேட்டரில் படுதோல்வி எதிரொலி… திட்டமிட்டதற்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா கங்குவா?

நயன்தாரா திருமணத்தை அடுத்து இன்னொரு நடிகையின் திருமண வீடியோ.. அதுவும் நெட்பிளிக்ஸ் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments