Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படப்பிடிப்பு முடிந்த கையோடு ஆகஸ்டில் பாவனாவின் திருமணம்!

Advertiesment
படப்பிடிப்பு முடிந்த கையோடு ஆகஸ்டில் பாவனாவின் திருமணம்!
, சனி, 11 மார்ச் 2017 (17:22 IST)
நடிகை பாவனா அண்மையில் பாலியல் தொல்லைக்கு ஆளான செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாவனா - நவீன் நிச்சயதார்த்தம் கொச்சியில் மார்ச் 9 ஆம் தேதி எளிமையாக நடைபெற்றது. இதில் நடிகைகள் மஞ்சுவாரியர், சம்யுக்தா, நெருங்கிய உறவினர்கள் உள்பட வெகு சிலரே கலந்து கொண்டனர்.

 
பாவனாவுக்கும் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் காதல் இருந்து வந்தது. இப்பிரச்சினைக்கு பிறகு பாவனாவை  சந்தித்த  நவீன், அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார். 
 
பாவனா ரகசியமாக நடத்திய நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று ஊடகங்களில் வெளியானது. இதற்கு பதில் அளித்த பாவனா, இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்றும், அப்போது அனைவருக்கும் திருமண அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
 
தற்போது பாவனா, நடிகர் பிரிதிவிராஜுடன் ’ஆடம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர ஒருசில படங்களிலும்  நடிக்கிறார்.  இவற்றின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாத இறுதியில் முடிவடையும் என தெரிகிறது. எனவே ஆகஸ்டு மாதம்  பாவனாவின் திருமணம் நடக்குமென்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியம் - கலக்கல் மீம்ஸ்