Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கும் ‘றெக்க’ பட இயக்குனர்!

vinoth
திங்கள், 8 ஜூலை 2024 (08:37 IST)
ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார். மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்து அவர் நடிப்பில் லப்பர் பந்து, ஆயிரம் கோடி வானவில் மற்றும் டீசல் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இந்நிலையில் அடுத்து அவர் றெக்க மற்றும் சீறு ஆகிய ஆகிய படங்களின் இயக்குனர் ரெத்தின சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை ஹரிஷ் கல்யாணின் மேலாளர் தயாரிக்க உள்ளாராம். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments