Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்தகாரம் பட இயக்குனரோடு கைகோர்க்கும் ஹரிஷ் கல்யாண்… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

அந்தகாரம் பட இயக்குனரோடு கைகோர்க்கும் ஹரிஷ் கல்யாண்… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

vinoth

, திங்கள், 1 ஜூலை 2024 (08:19 IST)
ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார். மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்து அவர் நடிப்பில் லப்பர் பந்து, ஆயிரம் கோடி வானவில் மற்றும் டீசல் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இந்நிலையில் நேற்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஹரிஷ் கல்யாணோடு ஒரு புதிய படத்துக்காக கைகோர்ப்பதை அறிவித்துள்ளது. இந்த படத்தை அந்தகாரம் படத்தின் இயக்குனர் விக்னராஜன் இயக்க உள்ளதாகவுமறிவிக்கப்பட்டுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!