Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கிய ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ பட ஷூட்டிங்!

vinoth
செவ்வாய், 19 மார்ச் 2024 (08:11 IST)
ஹேண்ட்ஸம் இளம் நடிகராக கோலிவுட் சினிமாவின் பெண்கள் ரசிகர்களை அடியோடு கவர்ந்திழுத்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளான சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பிறகு பொறியாளன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த அவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்டு பெரும் பிரபலமானார். மேலும் பியார் பிரேமா காதல் மற்றும் தாராள பிரபு திரைப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது. சமீபத்தில் அவர் நடித்த பார்க்கிங் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்து அவர் நடிப்பில் லப்பர் பந்து, ஆயிரம் கோடி வானவில் மற்றும் டீசல் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இதில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் டீசல் படத்தின் ஷூட்டிங் 100 நாட்களுக்கு மேல் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. விரைவில் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் மோகன்லால்.. செல்வராகவன் பாராட்டு!

பாடகர் எஸ்பிபி நினைவிடத்திற்கு யாரும் வரவேண்டாம்.. மகன் எஸ்பிபி சரண் கோரிக்கை..!

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments