விடுதலை படத்தின் OST இசையை வெளியிட்ட சோனி ம்யூசிக்!

vinoth
செவ்வாய், 19 மார்ச் 2024 (07:34 IST)
கடந்த ஆண்டு வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இளையராஜா இசையில் பாடல்கள் ஹிட்டடித்தன.

இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது. இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்ட புதிய நடிகர்களும் இணைந்துள்ளனர்.

இதையடுத்து பல மாதங்களாக இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. எப்போது முடியும் என இயக்குனருக்கே தெரியாது என்று படக்குழுவினர் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் முதல் பாகத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை தற்போது சோனி ம்யூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments