Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும். சதீஷுக்கு அறிவுரை கூறிய சிஎஸ்கே வீரர்

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (07:31 IST)
சமீபத்தில் திருமணம் செய்து புதுமாப்பிள்ளையான நடிகர் சதீஷ், திருமணத்திற்கு பின் வாய்ப்புகள் அதிகம் பெற்று வரும் நிலையில் நேற்று அவர் ‘பிரெண்ட்ஷிப்’ என்ற படத்தில் இணைந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் சிஎஸ்கே வீரருமான ஹர்பஜன்சிங் நாயகனாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்துள்ள நிலையில் நேற்று வெளியான ஒரு அறிவிப்பில் இந்த படத்தில் நடிகர் சதீஷ் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
 
ஹர்பஜன்சிங் உடன் நடிக்கவுள்ளது குறித்து நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில், ‘தமிழ்ப்புலவர் ஹர்பஜன் சிங் அவர்களுடன் இணைவது மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
 
சதீஷின் இந்த டுவிட்டுக்கு தமிழில் தனது டுவிட்டர் மூலம் பதிலளித்துள்ள ஹர்பஜன் சிங் கூறியதாவது: புது மாப்பிள்ளை சதீஷ் எப்பிடி இருக்கீங்க. தம்பி நல்லா சிரிச்ச முகம். பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க. படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும். நல்லா நெருக்கி செய்வோம்’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசரில் இளையராஜா பாட்டு… அடுத்த சர்ச்சையா?

மேடையில் அஞ்சலியத் தள்ளிவிட்டு அநாகரிகமாக நடந்துகொண்ட பாலகிருஷ்ணா… ரசிகர்கள் கண்டனம்!

குடும்பங்கள் கொண்டாடும் ஆன் தி வே… ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்கும் பாண்டிராஜ்!

ரிலீஸ் தேதியை லாக் செய்த சிவகார்த்திகேயனின் அமரன் படக்குழு!

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments