Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் ‘தளபதி 64’ படத்தில் இணைந்த பிரபலம்!

இன்று முதல் ‘தளபதி 64’ படத்தில் இணைந்த பிரபலம்!
, வெள்ளி, 20 டிசம்பர் 2019 (20:40 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அவ்வப்போது புதிய நட்சத்திரங்கள் இணைந்து வருகின்றனர்
 
சமீபத்தில் ’தளபதி 64’ படத்தில் நடிகர் நாசர் இணைந்தார் என்பது தெரிந்ததே. விஜய்யுடன் ‘வசீகரா’, ‘போக்கிரி’ உள்பட ஒருசில படங்களில் நடித்த நாசர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் படத்தில் இணைவதால் அவருக்கு வெயிட்டான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இன்று முதல் ’தளபதி 64’ படத்தில் நடன இயக்குனர் சதீஷ் இணைந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் பாடல் காட்சி ஒன்றில் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் விஜய்க்கு ஆக்சன் கட் சொன்னது எனக்கு பெருமையாக இருப்பதாகவும் நடன இயக்குநர் சதிஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” ரிலீஸ் தேதி அறிவிப்பு!