நடிகை ஏமி ஜாக்சனின் போனை ஹேக் செய்து, அவரது முக்கியமான இரு படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் ஒரு மர்ம நபர்.
ஏமி ஜாக்சன் 2.0 படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ளார். அவர் மும்பையில் இருந்தநேரம், மொபைல் சென்டர் ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது போனை ஹேக் செய்து இரு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஏமி தனது நண்பருடன் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படங்களாம் அவை. இது குறித்து மும்பை மட்டுமின்றி லண்டன் சைபர் க்ரைமிலும் புகார் செய்யவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.