Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல ஓடிடியில் குட்னைட் திரைப்படம்… ஸ்ட்ரீமிங் எப்போது?

பிரபல ஓடிடியில் குட்னைட் திரைப்படம்… ஸ்ட்ரீமிங் எப்போது?
, வியாழன், 22 ஜூன் 2023 (12:03 IST)
சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

நகர்ப்புற திரையரங்குகளில் நல்ல வசூலைக் குவித்த குட்னைட் இப்போதும் சில திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஜூலை 3 ஆம் தேதி முதல் இந்த திரைப்படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போர் தொழில் இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்புவா?... லேட்டஸ்ட் தகவல்!