Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் ‘கோட்’ 3வது சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? ஏஜிஎஸ் நிறுவனம் அறிவிப்பு..!

Siva
வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (19:12 IST)
தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த பாடல் குறித்த மற்ற விவரங்கள் நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த பாடல் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இடையே உள்ள மெலடி டூயட் பாடல் என்றும் கூறப்படுகிறது.

விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments