Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமரன் படத்தின் நடிகர் தேர்வு தவறென்று முதலில் நினைத்தேன்… இயக்குனரைப் பாராட்டிய ஞானவேல் ராஜா!

vinoth
வியாழன், 14 நவம்பர் 2024 (11:46 IST)
தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம் அக்டோபர் 31, தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது.

தீபாவளியை முன்னிட்டு அமரன், பிரதர், பிளடி பெக்கர் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வெளியானாலும் அதில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் மட்டுமே பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. அமரன் படம் முதல் நாளில் சுமார் 42 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து முதல் நாளிலேயே பிளாக்பஸ்டர் ஹிட்டை அறிவித்தது.

இதையடுத்து தற்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஒரு நேர்காணலில் பேசும்போது “அமரன் படத்தை மும்பையில் பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ‘டார்லிங் படத்தை மும்பையில் பார்த்தேன். கிளைமேக்ஸில் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். நான் கூட இந்த படம் தொடங்கிய போது தவறான ‘நடிகர்கள் தேர்வு’ என்று நினைத்தேன். ஆனா ரொம்ப நல்லா வந்துருக்கு எனப் பாராட்டினார்” எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments