Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடியும் தருவாயில் கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் படம்!

vinoth
ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (17:55 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.

அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதித்துள்ளார். மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை அவர்  இயக்கி வருகிறார். இந்த படத்தை மம்மூட்டியே தன்னுடைய ‘மம்மூட்டி கம்பெனி’ மூலமாக தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு “டோம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதோடு மம்மூட்டி இரவுடையோடு வீட்டில் நிற்பது போன்ற போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த படம் ஒரு ஆண் பெண் உறவைப் பற்றி பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக கௌதம் மேனன், தன்னுடைய படங்களை நிதானமாக பொறுமையாக எடுப்பார். ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக எடுத்து முடிக்கவுள்ளாராம். படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் நிறைவடையும் நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

நெட்பிளிக்ஸில் 2 கோடி பார்வைகளைக் கடந்து வெற்றிநடை போடும் மகாராஜா!

இரண்டாவது நாளில் பெரிய அளவில் சரிந்த தேவரா வசூல்!

தனது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments