Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் GOAT படத்தில் பாடல் எழுதியுள்ளாரா கங்கை அமரன்?

Webdunia
புதன், 6 மார்ச் 2024 (11:10 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

படம் பற்றி பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு “இந்த மாத இறுதியில் க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு விடும். அதன் பிறகு ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் உள்ளது. படம் ரீமேக் எல்லாம் கிடையாது. சொந்தக் கதைதான். படத்தில் நிறைய பாடல்கள் உள்ளன. ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். படத்தில்  வி எஃப் எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நிறைய உள்ளன. அதற்காக இந்தியாவிலும் லண்டனிலும் பல இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இப்போதைக்கு ரிலீஸ் தேதி குறித்து பேச முடியாது” என சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசியிருந்தார்.

இந்நிலையில் கோட் படத்தின் பாடல்கள் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் ஒரு பாடலை இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் எழுதியுள்ளதாகவும், அந்த பாடல் விஜய்யின் ஓப்பனிங் பாடலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை.. இணைந்த பிரபல இந்திய நடிகை..!

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments