Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிரடியாய் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த கங்கை அமரன்!

Advertiesment
அதிரடியாய் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த கங்கை அமரன்!
, செவ்வாய், 21 மார்ச் 2017 (15:58 IST)
இரு ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்தவர் இசையமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன். ஆர்.கே.நகர்  தொகுதியின் பாஜக வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட கங்கை அமரன், இன்று திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது  இல்லத்தில் சந்தித்தார்.

 
கங்கை அமரனனின் பையனூர் பங்களா மற்றும் நிலங்களை சசிகலாவின் ஆட்கள் மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவரையே ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது  பாஜக.
 
ஆனால் கங்கை அமரனோ திராவிட இயக்கங்களை மிக மோசமாகப் பேசி வெறுப்பை சம்பாதித்து வருகிறார். நேற்று தனது  சொந்த சகோதரர் இளையராஜாவை பேசிய விதம் பார்த்து சமூக வலைத் தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்  கங்கை அமரன். இந்த நிலையில், இன்று பிற்பகல் சம்பந்தமே இல்லாமல் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார் கங்கை  அமரன். வழக்கம்போல இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறிவிட்டார்.
 
தற்போது அவருக்கு பரபரப்பான செய்திகளில் இருக்க வேண்டும் என்பதுதான். நேற்று இளையராஜா... இன்று ரஜினிகாந்த்...  நாளை... என்னவோ என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார் கங்கை அமரன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேக்கப் மேன் என்னை அசிங்கமாக பேசி தாக்கினார்: நடிகை பிரயாகா மார்டின்!