Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயல்: இசை நிகழ்ச்சி மூலம் நிவாரண நிதி திரட்டும் ஏ.ஆா்.ரகுமான்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (11:31 IST)
வரும் டிசம்பர் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் பணத்தை மொத்தமாக கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவதாக இசைப்புயல் ஏ.ஆா்.ரகுமான் தொிவித்துள்ளாா்.
 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசும், அரசு சாரா தன்னாா்வலா்களும் தொடர்ந்து  செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது இசைப்புயல் ஏ.ஆா்.ரகுமானும் கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளாா். 
 
நாகப்பட்டினம் அருகே கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் காரணமாக 45 போ் உயிாிழந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
மேலும் தஞ்சை, திருவாரூா் உள்ளிட்ட மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய தென்னந்தோப்புகள் முழுவதுமாக சாய்ந்து மீளாத் துயரை ஏற்படுத்தி உள்ளன. 
 
இந்நிலையில் இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், டிசம்பா் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள எனது இசை நிகழ்ச்சியில் கிடைக்கக் கூடிய பணத்தில் குறிப்பிட்ட தொகையை கஜா புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதியாக வழங்க உள்ளதாக அவா் தொிவித்துள்ளாா். 
 
https://twitter.com/arrahman/status/1064905133652238336?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1064905133652238336&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fa-r-rahman-donates-fund-for-gaja-cyclone-disaster%2Farticleshow%2F66729262.cms

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments