Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஜி வி பிரகாஷ்!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (14:56 IST)
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வெற்றி பெற்றவர் ஜி வி பிரகாஷ். அவர் இசையமைப்பில் விரைவில் அவரின் 100 ஆவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகராகவும் 25 படங்கள் என்ற மைல்கல்லை கிங்ஸ்டன் படம் மூலமாக எட்டியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் ஜி வி பிரகாஷ் அளித்த ஒரு நேர்காணலில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார் ஜி வி பிரகாஷ். ஜி வி நடித்துள்ள ரெபல் திரைப்படம் டிசம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம்!

தனுஷின் ராயன் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கும் ‘றெக்க’ பட இயக்குனர்!

பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாகும் தென்கொரிய நடிகர்… ஸ்பிரிட் அப்டேட்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் ஹீரோயின் ஆகும் தமிழ் நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments