Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்து வழக்கு… ஒரே காரில் வந்து ஆஜரான ஜி வி பிரகாஷ் &சைந்தவி!

vinoth
திங்கள், 24 மார்ச் 2025 (13:46 IST)
2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், தனது பள்ளிகால தோழியும் பாடகியுமான சைந்தவியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இப்படி தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளாக இருந்த இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷும், பாடகி சைந்தவியும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர்.

இவர்களின் விவாகரத்துக்குக் காரணம் ஜி வி பிரகாஷ் நடிகை திவ்யபாரதியைக் காதலிப்பதுதான் என்றொரு தகவல் இப்போது வரை பரவி வருகின்றது. அதன் உண்மைத்தன்மை இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் விவாகரத்து அறிவித்த பின்னரும் ஜி வி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதனால் அவர்கள் விவாகரத்து முடிவைக் கைவிட்டார்களா என்ற கேள்வி கூட ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால் இப்போது இருவரும் விவாகரத்து வழக்குக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். இன்று ஒரே காரில் வந்த அவர்கள் நீதிமன்றத்தில் பிரிந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை முடிந்ததும் இருவரும் திரும்பவும் ஒரே காரில் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிரைலருக்கு நடுவுல Reference இல்ல.. Reference நடுவுலதான் டிரைலரே… எப்படி இருக்கு GBU டிரைலர்?

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments