முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சல்மான் கான் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள படம் சிக்கந்தர். இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் ரம்ஜானையொட்டி மார்ச் 31ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதை தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு படக்குழுவினர் பதில் அளித்தனர். அப்போது நிருபர் ஒருவர் சல்மான் கானிடம் “உங்களுக்கும் ராஷ்மிகாவுக்கும் 31 வயது வித்தியாசம் உள்ளதே” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சல்மான் கான் “இதில் ராஷ்மிகாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவரது தந்தைக்கும் எந்த பிரச்சினையும் இல்லாதபோது உனக்கு என்ன தம்பி பிரச்சினை?” என திரும்ப கேட்டுள்ளார். மேலும் “ராஷ்மிகாவின் அர்பணிப்பை பார்க்கும்போது எனது குழந்தை பருவம் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு ஈடுபாட்டுடன் செயல்படுவார்” என புகழ்ந்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Edit by Prsanth.K