Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிர்ச்சியில் உறைந்தேன்: மலையாள நடிகர் அனூப் மேனன் அதிர்ச்சி தகவல்!

அதிர்ச்சியில் உறைந்தேன்: மலையாள நடிகர் அனூப் மேனன் அதிர்ச்சி தகவல்!
, வெள்ளி, 24 மார்ச் 2017 (18:17 IST)
மலையாள திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனராக இருப்பவர் அனூப் மேனன். இவர் மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், மலையாளத்தில் ‘பாவாட, கனல், முந்திரி வல்லிகள், தளிர்க்கும்போல் உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ளார்.

 
 
இவர் கடந்த வாரம் லண்டனுக்கு சுற்றுலா சென்று இருந்தார். வெஸ்ட்மினிஸ்டர் பாலம் அருகே சுற்றி பார்த்து விட்டு அனூப்  மேனன் கிளம்பிய சில மணி நேரத்தில் அங்கு பயங்கர சத்தத்துடன் தூப்பாக்கி சூடு நடந்துள்ளது. ஐ.எஸ்.ஐ அமைப்பு நடத்திய  தாக்குதலில் மலையாள நடிகர் அனூப் மேனன் அதிர்ஷவசமாக உயிர் தப்பியுள்ளார்.
 
இதில் சம்பவ இடத்திலே நான்கு பேர் இறந்தனர். இந்த தாக்குதலில் தப்பியது  தொடர்பாக தனது  நண்பர்களுக்கு அனூப் மேனன் தகவல் தெரிவித்துள்ளார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியிருந்து மீள்வதற்கு பல மணி நேரம் ஏற்பட்டதாகவும், தற்போது  நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
சமூக வலைதளங்களில் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மலையாள திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அவரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரியாமிக்கா