Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்தனர்! சோனாலி மரண வழக்கில் திடுக் தகவல்!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (21:47 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சோனாலி என்பதும் இவர் சமீபத்தில் தனது உதவியாளர்கள் இருவருடன் கோவா சென்றிருந்த போது மர்மமான முறையில் மரணமடைந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சோனாலியின் சகோதரர் இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரில் சோனாலியின் உதவியாளர்கள் தான் சோனாலியை கொலை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்

இது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் சோனாலியின் உடலில் காயங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஒரு கொலை என சோனாலியின் குடும்பத்தினர் சந்தேகப்படுகின்றனர். அவரது தனிபட்ட உதவியாளர் சுதிர் சங்வான், சோனாலில்,அவர்  நண்பர் சுக்விந்தரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லட்டிருக்கலாம் என அவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

இது சம்பந்தமாக சுதீர் சுங்கான் மற்றும்  சுக்வீந்தர் சிங் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதேபோல், இரவு உணவு விடுதி உரிமையாளரும், போதைப் பொருள் கடத்தல் நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டதில், சோனாலிக்கு தண்ணீரில் மயக்க மருந்தை கலந்துகொடுத்து, குடிக்க வைத்து, அவரைக் கட்டாயப்படுத்தி,  மதுபானம் குடிக்க வைத்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்துஜா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

தமிழ்ப் படம் புகழ் ஐஸ்வர்யா மேனனின் கார்ஜியஸ் போட்டோஸ்!

பொங்கல் ரிலீஸை உறுதி செய்த மெட்ராஸ்காரன் படக்குழுவினர்!

விடாமுயற்சி பார்த்துவிட்டு அஜித் சார் இதைதான் சொன்னார்… மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் ‘டாம்னிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்