Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனாதையாக இருந்தவருக்கு ஆதரவு கொடுத்த பிரபல தொகுப்பாளினி; வைரலாகும் வீடியோ

Advertiesment
அனாதையாக இருந்தவருக்கு ஆதரவு கொடுத்த பிரபல தொகுப்பாளினி; வைரலாகும் வீடியோ
, வியாழன், 21 டிசம்பர் 2017 (11:27 IST)
`சமையல் மந்திரம்' நிகழ்ச்சி மூலம் இளசுகளைச் சுண்டி இழுத்து, சின்னத்திரைத் தொடர்கள் வழியே மக்கள் மனங்களில் நிறைந்தவர் நடிகை திவ்யா. இவர், தற்போது `வம்சம்', `மரகதவீணை' போன்ற தொடர்களில் தன் நடிப்புத்திறனை  வெளிப்படுத்தி  வருகிறார்.  
இந்நிலையில் தொகுப்பாளினி திவ்யா சமீபத்தில் நடுரோட்டில் அனாதையாக இருந்த முதியவரை அழைத்து சென்று அவருக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியால் திவ்யாவை பலர் தவறாக கூறிவந்தாலும், தற்போது இவர் செய்துள்ள காரியம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. மேலும் அவருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன் ஜாமின் கோரி அமலா பால் மனு