Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபிலிம் காட்டுகிறாரா விஷால்...?

Advertiesment
ஃபிலிம் காட்டுகிறாரா விஷால்...?
, வியாழன், 19 ஜனவரி 2017 (14:53 IST)
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் கீறி வைகுண்டம் போனானாம். அந்த கதையாதான் இருக்கு விஷாலோட  வீராப்பு.

 
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இவர் போட்ட ட்வீட் ஜல்லிக்கட்டுக்கு எதிரானது போல தெரிய, ட்விட்டரில் அவரை தாளித்துவிட்டனர். அதற்கு விளக்கம் கொடுக்க வந்தவர், ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே. எனக்கு பீட்டான்னா என்னான்னே தெரியாது என்றார் அரசியல்வாதி ரேஞ்சுக்கு.
 
விஷால் என்று சொன்னாலே ஜிவ்வுன்னு கோபம் ஏறுகிறது போராட்டக்காரர்களுக்கு. இந்நிலையில், பிரதமரைப் பார்க்கப்  போறேன், ஜல்லிக்கட்டை வலியுறுத்தப் போறேன் என்று கிளம்பியிருக்கிறார்.
 
ஆனானப்பட்ட தமிழக முதலமைச்சர் போன பிறகே அதெல்லாம் ஆவுற காரியமில்லை என்று கதவடைத்திருக்கிறார்,  ஜல்லிக்கட்டு தடைக்கு சூத்திரதாரியான மோடி. இதில் நடிகர் சங்க செயலாளர் என்ற வெத்துவேட்டு கெத்தில் இவர் டெல்லி  போய் பிரதமரை சந்திக்கப் போறாராம்.
 
மெரினாவுக்கு போகலையா, போராட்டத்தில் கலந்துக்கலையான்னு யாராவது கேட்டால், டெல்லிக்கு போறேன்னு  எஸ்கேப்பாகலாம்ல அதுக்குதான் இந்த பில்டப் என்கிறார்கள்.
 
எப்படியோ... விஷாலோட சாயம் வெளுத்துப் போச்சி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சங்க உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிர்ப்பு!