Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தொடங்குகிறது திருப்பதி பிரம்மோற்சவம்: சாலைகளில் மின்விளக்கு அலங்காரம்..!

Siva
வியாழன், 3 அக்டோபர் 2024 (11:56 IST)
நாளைய திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்க இருப்பதை அடுத்து, சாலைகளில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு நாளை, அதாவது அக்டோபர் நான்காம் தேதி, பிரம்மோற்சவம் விழா தொடங்குவதாகவும், அக்டோபர் 12ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை முன்னிட்டு, கொடி கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடி  ஏற்றப்பட்டதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. பிரமோற்சவம் விழாவை அடுத்து, திருப்பதி திருமலையில் வண்ண விளக்குகள் ஏற்றப்பட்டதாகவும், தோரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அடுத்து, திருப்பதி மற்றும் திருமலை ஜெகஜோதியாக காட்சி அளித்து வருகிறது. திருப்பதி ரயில் நிலையம், தேவஸ்தான நிர்வாக அலுவலகம், திருச்சானூர் - திருப்பதி சாலை, சித்தூர் - திருப்பதி சாலை ஆகியவற்றில் மின் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால், நாளை முதல் 12ஆம் தேதி வரை கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments