Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 ஆண்டுகளான விஜய்யிஸம்: ரசிகர்கள் கொண்டாட்டம்!!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (15:02 IST)
‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் டிசம்பர் 4, 1992-ல் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் விஜய். தற்போது விஜய் சினிமாவில் நுழைந்து 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.


 
 
ஆரம்பகாலத்தில் சறுக்கல்களை சந்தித்தாலும் 1996-ஆம் வருடம் விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.
 
லவ் டுடே, காதலுக்கு மரியாதை, பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், குஷி, ப்ரென்ஸ், பிரியமானவளே, திருமலை, கில்லி, போக்கிரி, காவலன், துப்பாக்கி, கத்தி, தெறி என பல வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ள விஜய்க்கு தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாது கேரளா சினிமாவிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகி உள்ளது.
 
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்று சொல்லப்படும் விஜய், இதுவரை மூன்று முறை 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார். 
 
விஜய்-யின் 24 வருட திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் இன்று சில திரையரங்குகளில் இவரது படங்கள் திரையிடப்படவுள்ளது. சில ஏரியாக்களில் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு அன்னதானத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். 
 
25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் #24YearsOfUnrivalledVIJAY, #24YearsOfVIJAYism, #24YearsOfIlayaThalapathyVIJAY, #24yearsofthalapathyism ஆகிய ஹேஷ்டேக்கை டுவிட்டரில் உருவாக்கி அதனை டிரெண்ட்டாக்கி வருகின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments