Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹோலி கொண்டாட்டமாக ஃபேமிலி ஸ்டார் படத்திலிருந்து “மதுரமு கதா” எனும் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியானது !!

Advertiesment
Family star movie

J.Durai

, புதன், 27 மார்ச் 2024 (08:12 IST)
நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர்  நடிப்பில் உருவாகி வரும்  "ஃபேமிலி ஸ்டார்" திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'மதுரமு கதா'  பாடலின் லிரிகல் வீடியோ, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள மை ஹோம் ஜூவல் கேட்டட் கம்முயூனிட்டியில்  பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. 
 
இந்த நிகழ்ச்சியில் ஹீரோ விஜய் தேவரகொண்டா, நாயகி மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொள்ள, மை ஹோம் ஜூவல் குடும்பத்தினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 
 
ஹோலி பண்டிகை நாடகம், நடனம் மற்றும் திரைப்படக் குழுவினருடன் புகைப்படங்கள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 
 
தயாரிப்பாளர் தில் ராஜு, "எங்கள் 'ஃபேமிலி ஸ்டார் ' படக்குழுவை உற்சாகமாக வரவேற்ற அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி. 'பேமிலி ஸ்டார்'  திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகிறது. 'பேமிலி ஸ்டார்'  என்றால் என்ன என்பதை அனைவருடனும் பகிர்ந்து கொண்டேன். தங்கள் குடும்பத்தை உயர்த்த கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவருமே  'பேமிலி ஸ்டார்' தான். இந்த கதையை முதலில் கேட்டது விஜய் தான். 
 
பரசுராம் தொலைபேசி வழியே இந்த அட்டகாசமான கதையை என்னிடம் சொன்னார், கதையைக் கேட்ட 15 நிமிடங்களில் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நடுத்தர குடும்பங்களை பிரதிபலிக்கும் அழகான கதை இது.  நடுத்தர குடும்பத்தின் அனைத்து வகை உணர்ச்சிகளையும், விஜய்யின் கதாபாத்திரத்தின் வழியே படம்பிடித்துள்ளார் இயக்குநர்.பாடல்கள், வசனங்கள் மற்றும் ஹீரோவின் பழக்கவழக்கங்கள் என இப்படத்தின் அனைத்து அம்சங்களும் உங்கள் சொந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும்படி இருக்கும். வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி, பார்வையாளர்கள் குடும்பங்களோடு  திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
 
படம் குறித்து ஹீரோ
 
 விஜய் தேவரகொண்டா கூறுகையில்: 
 
“வண்ணங்களால் உடை கறைபட்டுவிடும் என்ற பயத்தில், பள்ளிக் காலத்தில் ஹோலி பண்டிகையை தவிர்த்து வந்தேன், ஆனால் தேர்வுக்காலத்தின் போது அனைவரும் கலர் கலராக இருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால், இங்கு ஹோலியை  உங்களுடன் கொண்டாடுவது தான் உண்மையான கொண்டாட்டமாக இருக்கிறது. இப்போது உங்கள் தேர்வுகள் முடிந்துவிட்டதால், ஏப்ரல் 5 ஆம் தேதி எங்களுடன் திரையரங்குகளில் 'பேமிலி ஸ்டார்'  படத்தை பார்க்க வாருங்கள். 
 
இது நம்மைப் போன்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் கதை, குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்களின் கதை. ஒரு நல்ல சினிமா அனுபவம். என்றார்.
 
 நாயகி மிருணாள் தாகூர் கூறுகையில் 
 
"நான் வழக்கமாக மும்பையில் ஹோலி கொண்டாடுவேன், ஆனால் இந்த முறை, 'ஃபேமிலி ஸ்டார்' படக்குழுவினருடனும், உங்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் ஃபேமிலி ஸ்டார்  குழுவின் ஹோலி நல்வாழ்த்துக்களை, உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்குகளில் 'ஃபேமிலி ஸ்டாரை' பார்த்து ரசியுங்கள் என்றார்.
 
ஸ்ரீமணியின் வரிகள் மற்றும் கோபி சுந்தரின் இசையமைப்பில், ஸ்ரேயா கோஷலின் குரலில் 'மதுரமு கதா'  மூன்றாவது சிங்கிள் அழகாக அமைந்துள்ளது. பாடலின் வசீகரிக்கும் வரிகள், அதை உடனடி ஹிட் ஆக்கியுள்ளது. இதுவரை வெளியான "ஃபேமிலி ஸ்டார் "  படத்தின் அனைத்துப் பாடல்களும் உடனடி சார்ட்பஸ்டர்களாக மாறியுள்ளன, மேலும் மூன்றாவது சிங்கிள் பாடலான 'மதுரமு கதை'  பாடலும், இசை ரசிகர்களை கவர்ந்திழுத்து அதே போல் பெரிய ஹிட்டாகியுள்ளது. "ஃபேமிலி ஸ்டார்" படத்தின் டிரைலர் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாகிறது.
 
"ஃபேமிலி ஸ்டார்" படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற புகழ்பெற்ற பேனரின் கீழ் நட்சத்திர தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர்  தயாரித்துள்ளனர். இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கியுள்ள இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இருக்கும். வாசு வர்மா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 5ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது.
 
https://www.youtube.com/watch?v=23qnknfIGog

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிருத்விராஜ் சுகுமாரனின் ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்திற்கு-நடிகர் சூர்யா பாராட்டு!