Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோமாஞ்சம் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் நடிக்கும் ஆவேஷம் படத்தின் முதல் லுக் போஸ்டர்!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (09:34 IST)
சமீபகாலமாக திரைப்படங்களுக்கு போதுமான வரவேற்பு திரையரங்குகளில் கிடைப்பதில்லை என சொல்லப்படுகிறது. பாலிவுட்டில் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. ஆனால் இப்படியான சூழ்நிலையில் கூட சில சிறிய பட்ஜெட் படங்கள் எதிர்பாராத வெற்றியைப் பெற்று நம்பிக்கை அளிக்கின்றன. கன்னடத்தில் வெளியான காந்தாரா மற்றும் தமிழில் வெளியான லவ் டுடே போன்ற படங்களே இதற்கு சாட்சி.

அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி அப்படி ஒரு வெற்றியைப் பெற்றது மலையாளத் திரைப்படமான ரோமாஞ்சம் என்ற திரைப்படம். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், செம்பன் வினோத், அர்ஜூன் அசோகன், அசீம் ஜமால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹாரர் காமெடி திரைப்படமாக குறுகிய லொகேஷன்களில் படமாக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 54 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 3 கோடி ரூபாயில் உருவான இந்த திரைப்படம் இந்த ஆண்டில் மலையாள சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நடிகர் பஹத் பாசில். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் நடந்து முடிந்துள்ள நிலையில் இப்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலிஸாகி கவனம் ஈர்த்துள்ளது. ஆவேஷம் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிடப்பில் போடப்பட்டதா ராகவா லாரன்ஸின் ‘ஹண்டர்’ திரைப்படம்!

இயக்குனர் பிரபு சாலமனின் கும்கி 2 ஷூட்டிங் நிறைவு!

பிரபுதேவா நடிக்கும் ‘சிங்காநல்லூர் சிக்னல்’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!

பஹத் பாசிலோடு இணைந்து நடிக்கும் மாரீசன் படம் பற்றி வடிவேலு தந்த அப்டேட்!

நேரடியாக ஹாலிவுட் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments