Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் பஹத் பாசில் நடிக்கும் ‘தூமம்’… முதல் லுக் போஸ்டர் வெளியீடு!

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் பஹத் பாசில் நடிக்கும் ‘தூமம்’… முதல் லுக் போஸ்டர் வெளியீடு!
, செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (13:44 IST)
நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த Hombale Films என்ற நிறுவனம் இந்திய அளவில் முன்னணி நிறுவனம் ஆகியுள்ளது.  இந்த ஆண்டு அந்த நிறுவனம் மற்றொரு படமான காந்தாரா மிகப்பெரிய வெற்றியை ஈட்டி இந்திய அளவில் கவனம் ஈர்த்தது. இதையடுத்து பல மொழிகளில் இருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர்களை தங்கள் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் செய்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டில் ஹோம்பலே நிறுவனம் அடுத்த 5 ஆண்டில் சுமார் 3000 கோடி ரூபாயை இந்திய சினிமாவில் முதலீடு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இப்போது அந்நிறுவனம் தயாரிப்பில் ஃபஹத் பாசில், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடிக்கும் தூமம் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை லூசியா படத்தின் இயக்குனர் பவன் குமார் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜாவை மிஸ் செய்கிறேனா?... இயக்குனர் மணிரத்னம் பகிர்ந்த தகவல்!