Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழு கடல் ஏழு மலை படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு… வீடியோ வெளியிட்ட படக்குழு!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (08:51 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிப்பில் ஏழு மலை ஏழு கடல் என்ற படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த படத்தில் சுமா 90 நிமிடக் காட்சிகளில் கிராபிக்ஸ் பணிகள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. அதுதான் படத்தின் ரிலீஸ் தாமதத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு நல்ல டிமாண்ட் உள்ளதாகவும், டிஸ்னி மற்றும் சோனி லிவ் ஆகிய தளங்களோடு நல்ல விலைக்கு விற்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு, தற்போது படக்குழு நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் விரைவில் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments