Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையுலகில் இருந்து விலக போவதாக துஷாரா விஜயன் திடீர் அறிவிப்பு. . என்ன காரணம்?

திரையுலகில் இருந்து விலக போவதாக துஷாரா விஜயன் திடீர் அறிவிப்பு. . என்ன காரணம்?
Siva
திங்கள், 8 ஜூலை 2024 (19:17 IST)
நடிகை துஷாரா விஜயன் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மூன்றுமே பிரபலங்களின் படங்கள் என்ற நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இன்னும் சில ஆண்டுகளில் திரையுலகில் இருந்து விலகப் போகிறேன் என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்.

பா ரஞ்சித் இயக்கிய ’சார்பட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் மாரியம்மாள் என்ற கேரக்டரில் நடித்து அசத்திய துஷாரா விஜயன் தற்போது ரஜினியின் ’வேட்டையன்’ தனுஷின் ராயன் மற்றும் விக்ரமின் வீர தீர சூரன் ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது என்னுடைய 35 வது வயதில் நான் திரை உலகில் இருந்து விலகி விடுவேன் என்றும் அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்றும் அதன் பிறகு உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

துஷாரா  விஜயனின் இந்த பேட்டி ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 35 வயது வரை உங்களை நடிக்க நாங்களும் அனுமதிக்க மாட்டோம் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்டான லுக்கில் ஹாட்டான போஸ் கொடுத்த திவ்யபாரதி!

அழகுப் பதுமை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்.. செல்வராகவனின் இன்றைய தத்துவ முத்து!

மும்பையில் முகாமிட்ட லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படக்குழு!

பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படம் தொடங்குவதில் தாமதம்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments