Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின் ராயன் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

தனுஷின் ராயன் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

vinoth

, திங்கள், 8 ஜூலை 2024 (08:41 IST)
தனுஷ், தனது 50 ஆவது படமான ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 20 நிமிடம் ஓடும் வண்ணம் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளதாம்.

மேலும் படம் விரைவில் சென்சாருக்கு செல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் படத்தின் டிரைலர் வெளியாகும் என தெரிகிறது. வட சென்னையில் நடக்கும் ஒரு ஆக்‌ஷன் கதையாக தனுஷ் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கும் ‘றெக்க’ பட இயக்குனர்!