Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருடன் வெற்றியால் சூடுபிடிக்கும் லெஜண்ட் சரவணனின் அடுத்த படம்… ஷூட்டிங் எப்போது?

vinoth
திங்கள், 3 ஜூன் 2024 (08:00 IST)
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அவரின் தோற்றம் உருவ கேலிகளுக்கும் ஆளானது.

இதையடுத்து அவர் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் இயக்கி கடந்த வாரம் ரிலீஸான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன்முலம் மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளார் இயக்குனர் துரை செந்தில்குமார்.

இதனால் இப்போது லெஜண்ட் சரவணனின் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 7 ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கவுள்ளது. தொடர்ச்சியாக 70 நாட்கள் ஷூட்டிங் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

பிரசாந்த் நீல் & ஜூனியர் என் டி ஆர் இணையும் படம் ட்ராப்பா?... இணையத்தில் பரவும் தகவல்!

கைவிட்ட நெட்பிளிக்ஸ்… வேறு ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா தங்கலான்?

ஷூட்டிங் ஸ்பாட்டில் அறிமுக இயக்குனரை அவமானப்படுத்திய கவின்?

ஜூனியர் என் டி ஆரை இயக்கும் நெல்சன்… நண்பனுக்கு வாய்ப்பு வாங்கித் தந்த அனிருத்!

அடுத்த கட்டுரையில்
Show comments