Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

vinoth
திங்கள், 17 ஜூன் 2024 (18:24 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ், சம்யுக்தா மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸான திரைப்படம் வாத்தி. இந்த படத்தை தெலுங்கு இயக்குனரான வெங்கட் அட்லூரி இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த படம் வசூலில் குறைவைக்கவில்லை.

இதையடுத்து வெங்கட் இயக்கும் அடுத்த பேன் இந்தியா படமான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி கவனம் ஈர்த்தது. பீரியட் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் வங்கி ஊழியராக துல்கர் சல்மான் நடிக்கிறார். அவர் கணக்கில் நம்ப முடியாத அளவுக்கு பணம் இருக்க, அது எப்படி சாத்தியம் என்பதே கதையாக இருக்கும் என டிரைலரைப் பார்த்து யூகிக்க முடிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments