Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்த வதந்தியும் பரப்பாதீர்கள்... கணவரை இழந்த வேதனையில் பிரபல நடிகை வீடியோ வெளியீடு!

Advertiesment
sruthi sanmuka priya
, வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (20:20 IST)
சின்னத்திரை நடிகை சுருதி சண்முக பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் 30 வயதில் மரணமடைந்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பல யூடியூப் சேனல்கள் வதந்தி பரப்பி வரும் நிலையில் சுருதி சண்முக பிரியா வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆனவர் சுருதி சண்முக பிரியா. இவர், கல்யாண பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா  உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் தன் நீண்ட நாள் காதலரான அரவிந்த் சேகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் திருமணமாகி ஓராண்டு ஆகும் நிலையில், சுருதியின் கணவர் அரவிந்த்  மாரடைப்பால் காலமானார்.

இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர், சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் சேகர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு ‘’மிஸ்டர் தமிழ்நாடு’’ பட்டம் வென்றவர் ஆவார்.

இந்த நிலையில், அரவிந்த் சேகரின் மரணம் பற்றி பல யூடியூப் சேனல்கள் வதந்தி பரப்பி வரும் நிலையில் சுருதி சண்முக பிரியா வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், அரவிந்தின் இறப்பு செய்தி கேட்டு பலர் நேரிலும், போனிலும் ஆறுதல் கூறி எங்கலுக்கு பலம் கொடுத்தீர்கள் அவர்களுக்கு நன்றி. இந்த கஷ்டமான நேரத்திலும் வீட்டிலுள்ள சடங்குகளை விட்டுவிட்டு நான் வீடியோ வெளியிட காரணம் உள்ளது.

பல  நியூஸ் சேனல்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமலே  வதந்திகள் பரப்பி வருகிறார்கள். அவர்கள் போடும் விசயங்களால் வீட்டில் உள்ளவர்கள் காயப்படுகிறார்கள். இப்படி பண்ண வேண்டாம் என யூடியூப் சேனல்களிடம் கேட்டுக் கொள்கிறேன். என் கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். இதைத்தாண்டி வா நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம் என்று உருக்கமாக கூறினார்.

மேலும், என் கணவர் ஒரு பாடிபில்டர், டிரெய்னர், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும்போது இறந்துவிட்டார் என்பதெல்லாம் இல்லை. அவர் சிவில் இன்ஜினியர். பிட்னஸ் மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம் என்று  தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரமுகி 2 பட புதிய அப்டேட் அறிவித்த படக்குழு